• Sep 09 2025

உலக நாயகனை உச்சி குளிர வைத்த SK.! சைமா விழாவில் தரமான சம்பவம்

Aathira / 5 hours ago

Advertisement

Listen News!

2022 ஆம் ஆண்டிற்கான சைமா விருதுகள் வழங்கும் விழா கடந்த வாரம் பெங்களூரில் நடைபெற்றது. இதில்  ரன்வீர் சிங், கமலஹாசன், அல்லு அர்ஜுன், ஆர்யா, லோகேஷ் கனகராஜ், யாஷ், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், திரிஷா,  கார்த்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

குறித்த விழாவில்  நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் பல சைமா விருதுகளை தட்டிச் சென்றது.  அதுபோல அமரன் படத்திற்கான சிறந்த தயாரிப்பாளர் விருதும் கமலஹாசனுக்கு கிடைத்தது. சிறந்த முன்னணி நடிகருக்கான விருதை சிவகார்த்திகேயன் பெற்றார். 

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் உலக நாயகன் கமல்ஹாசனை உச்சிக்குளிர வைத்துள்ளதாக பேசப்படுகிறது.


அதாவது  கொட்டுக்காளி படத்துக்கு கமல்ஹாசன் சார் அளித்த பாராட்டுங்கள் எங்க டீமுக்கு பெரிய எரிசக்தியாக காணப்படுகின்றது. நான் தயாரித்த இன்னொரு படத்தின் 'ரஷ்'ஸ்  பார்த்த கமல் சார் பதினைந்து நிமிடம் பாராட்டினார். இது ராதிகா மேமுக்கான புதிய பாதையை திறக்கும் படம் என பெருமிதமாகவும் தெரிவித்துள்ளார். 

கமல் சார் போட்ட பாதையில் பயணிக்கின்றோம். நீங்கள் நினைக்கின்ற உலக சினிமாவுக்கு கொண்டு வருவோம் என்பதை சைமன் விருது மேடையில் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement