• Dec 27 2024

இந்த தருணங்கள் பற்றி நிறைய சொல்லனுமுனு ஆசை! நட்டிக்காக ஹிப் ஹாப் ஆதி போட்ட பதிவு !

Nithushan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் பலரும் ஆரம்ப காலங்களில் சினிமாவில் வேறு துரையிலேயே தமது சினிமா பயணத்தை ஆரம்பித்தனர். அவ்வாறே இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக இருக்கும் ஹிப் ஹாப் ஆதி  நடிகர் நட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


நடராஜன் சுப்ரமணியம் நட்டி அல்லது நட்ராஜ் என அழைக்கப்டும் முன்னணி நடிகர் இவர் ஆவார். திரைப்பட ஒளிப்பதிவாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் பணியாற்றும் இவர் சமீபத்தில் நடித்த மஹாராஜா திரைப்படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி மக்களால் விரும்பப்பட்டார்.


இந்த நிலையிலேயே ஹிப் ஹாப் ஆதி  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் " தியேட்டரில்  சதுரங்க வேட்டை படத்தை பார்த்து எப்படி பிரமித்தேனோ அதே பிரமிப்பை ஏற்படுத்தியது மகாராஜா  இந்த தருணங்களை பற்றி  நிறைய சொல்ல வேண்டும் என  ஆசை, but due to technical difficulties இப்போ சொல்ல முடியல  கூடிய விரைவில் !!!நட்டி சார் நீங்க கேமரா பின்னாடி மட்டுமல்ல , முன்னாடியும் rockstar தான் - Happy Birthday to You" என பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

   

Advertisement

Advertisement