• Oct 26 2024

படிக்கும் போதே அரசியலில் குதிக்க சொன்ன விஜய்..? மாணவர்கள் அதிரடியாக எடுத்த உறுதிமொழி

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

கடந்த வருடம் முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் விதமாக அவர்களை அழைத்து ஊக்கத்தொகை வழங்கி வருகின்றார் நடிகர் விஜய்.

அதன்படி இந்த வருடமும் திட்டமிடப்பட்ட இந்த விழாவில், இம்முறை  பொது தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு போல் இல்லாமல் இந்த ஆண்டு சரியான திட்டமிடலில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலை 9.30 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த விழா, மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.


இந்த விழாவில் நடிகர் விஜயின் குட்டி ஸ்டோரி கேட்பதற்காக ரசிகர்கள் மாணவ, மாணவிகள் எல்லோரும் ஆவலாக காத்திருந்தார்கள். 

அதன்படி நடிகர் விஜய் கூறுகையில், எல்லா துறையும் நல்ல துறை தான். நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில்  100% உழைப்பை போட்டாலே வெற்றி நிச்சயம். அதனால் உங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுங்கள் என்று கூறியுள்ளார்.


மேலும் தமிழ்நாட்டிற்கு நல்ல தலைவர்கள் தேவைப்படுகின்றது. அதனால் படிக்கும் போதே மறைமுக அரசியலில் ஈடுபடுங்கள். சில பொய்யான அரசுகளை இனம் காண பழகுங்கள். அதேபோல நட்பிலும் தவறான பழக்கங்களில் ஈடுபடுபவரை கண்டு திருத்துங்கள். பெற்றோருக்கு பிறகு நட்புதான் லைப் கூடவே வரும். அதனால நல்ல நட்பை கையோடு வைத்திருங்கள். உங்களது அடையாளத்தை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் . அதை யாருக்காகவும் தொலைச்சிடாதீங்க என அட்வைஸ் பண்ணியுள்ளார்.

கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்தும் தமிழகத்தில் அதிகரித்து வரும் போ.பழக்கங்கள் குறித்தும் வருத்தம் தெரிவித்ததோடு, மாணவ மாணவிகள் அனைவரும் Say no to temporary Pleasures, say no to drugs என்கிற உறுதி மொழியை ஏற்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொண்டார். 

இதேவேளை இந்த விருது விழாவில் நாங்குநேரி சாதி  தாக்குதலுக்கு ஆளான மாணவன் சின்னத்துறையுடன் அருகில் அமர்ந்து அங்கு அவர்களிடம் நலம் விசாரித்துள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement