• Dec 29 2024

ஆமா.. நான் சாதிவெறியன் தான்..! கடும் சீற்றத்தில் கொந்தளித்த நடிகர் ரஞ்சித்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து  பிரபலமானவர்தான் நடிகர் ரஞ்சித். இவர் நடித்த படங்களில் மறுமலர்ச்சி, சபாஷ், பசுபதி ராசாகபாளயம், பாண்டவர் பூமி உள்ளிட்ட படங்கள் பெருமளவில் பேசப்பட்டது.

எனினும் சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகி இருந்தவர், தற்போது சின்னத் திரையில் நடிகராக வலம் வருகின்றார். அதுவும் பாக்கியலட்சுமி சீரியலில் ரொமான்டிக் ஹீரோவாக நடிக்கின்றார்.

இந்த நிலையில், காதல் திருமணங்கள் பற்றி காட்டமான கருத்துக்களை தெரிவித்துள்ளார் நடிகர் ரஞ்சித்.


அதன்படி அவர் கூறுகையில்,  சமூக நீதியை பற்றி பேசினால் எனக்கு கடும் கோபம் வரும். மகளைப் பெற்றவர்கள் கஷ்டப்பட்டு வளர்த்து கிளி போல் ஆளாக்கி கண்டவன் தூக்கிச் செல்ல கொடுப்பதுதான் சமூக நீதியா? உங்களைப் போல நாலு பேர் கையெழுத்து போட்டால் அது திருமணம் ஆகி விடுமா அப்படி என்றால் பெற்றோர்களை நிலை என்ன?

சமூக நீதியை பேசும் போராளிகள் முதலில் தன் மகளுக்கு சுயமரியாதை திருமணத்தை செய்துவிட்டு அதற்குப் பிறகு அடுத்தவர்களின் மகளுக்கு திருமணம் செய்து வைக்கட்டும்.

சாதி பிரிவினையை உண்டு பண்ண வேண்டும் என்பதற்காகவே இந்த திருமணங்கள் நடத்தப்படுகின்றன. பெற்றோர்  கையொப்பம் இல்லாமல் காதல் திருமணங்கள் செல்லுபடி ஆகாது என பதிவாளர் அலுவலகத்தில் சட்டம் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் இந்த நாடகக் காதல் திருமணங்கள் நிகழாது. நாடக காதலை எதிர்பார்ப்பதால் நான் சாதி வெறியன் என்றால் ஆமாம் நான் சாதிவெறியன் தான் என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement