• Dec 27 2024

இந்திய சினிமாவில் பணக்கார மெகா குடும்பம் யாருடையது தெரியுமா? ஆயிரம் கோடிக்கணக்கில் புரளும் சொத்துக்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாத்துறையில் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமின்றி சின்னத்திரை நட்சத்திரங்களும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகவே காணப்படுகின்றனர்.

அதிலும், சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களை விட, நாளாந்தம் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உண்டு.


அந்த வகையில், சினிமாவில் நடிகர்கள் முதல் தயாரிப்பாளர்களை வரை தங்களது வாரிசுகளை சினிமா துறையில் களம் இறக்கி சினிமா குடும்பங்களாக மாறி விடுகின்றனர்.

இந்த நிலையில், இந்திய சினிமா வரிசையில் யாருடைய குடும்பம் பணக்கார குடும்பம் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த சினிமா குடும்பங்களில் மிகவும் பணக்கார திரைப்பட குடும்பம் தெலுங்கு சினிமாவை சேர்ந்தது. 


இந்த குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு மட்டும், கபூர்கள் மற்றும் அக்கினேனிகளை காட்டிலும் அதிகமாகும். இந்த தெலுங்கு சினிமா குடும்பத்தில் 4 சூப்பர் ஸ்டார்கள் உள்ளதாக கூறப்படுகிறது. 

அது வேறு யாருமில்லை தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்ப உறுப்பினர்கள்தான்.  அல்லு-கொனிடேலா குடும்பம் தான் நாட்டின் பணக்கார சினிமா குடும்பம்.  


தெலுங்கு சினிமா துறையில் மெகா குடும்பம் என்ற அழைக்கப்படும் அல்லு- கொனிடேலா குடும்பத்தின் ஆதிக்கம் அதிகம். இந்த மெகா குடும்பம் இந்தியாவின் மிக முக்கியமான திரைப்பட குடும்பங்களில் ஒன்றாகும்.

குறித்த குடும்பம், அல்லு ராமலிங்கய்யாவால் 1950ல் மெகா குடும்பமாக உருவானது. மேலும் அவர் பிரபலமான நடிகர் மட்டுமின்றி நகைச்சுவை நடிகர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவரான திகழ்கின்றார்.

இவரை தொடர்ந்து, அவரது 4 பிள்ளைகளும் தெலுங்கு சினிமாவில் வலுவாக தடம்பதித்துள்ளனர்.  இந்த கூட்டு குடும்பத்தின் மொத்த கணக்கில் சிரஞ்சீவி, ராம் சரண், அல்லு அரவிந்த் மற்றும் அல்லு அர்ஜூன் ஆகியோரின் பங்களிப்பு பெரியது. மெகா குடும்பத்தின் புகழ்பெற்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பை மொத்தமாக பார்த்தால் சொத்து மதிப்பு ரூ.6,000 கோடியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.  


Advertisement

Advertisement