தமிழ் சினிமாவின் முக்கியமான நபர்களில் ஒருவர் நடிகரும் இயக்குநருமான ஆர். பார்த்திபன். எப்போதும் சமூக வலைத்தளங்களில் தனது தனித்துவமான சிந்தனைகள், உணர்ச்சிமிக்க பதிவுகள், மற்றும் சமூக உணர்வுகளுடன் கூடிய செயல்கள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் இவர், தற்போது தனது சமீபத்திய பதிவு மூலம் மீண்டும் ஒரு முறை மக்கள் மனங்களைத் தொட்டுள்ளார்.
அது ஒரு சாதாரண சினிமா பூஜை நிகழ்வு பற்றியது இல்லை. மிக அரிதான, நெகிழ்ச்சி தரும் மற்றும் சமூக நலனோடு இணைந்த நிகழ்வை, பார்த்திபன் தனது சொந்த செலவில் செய்திருக்கிறார், அதைப் பற்றிய பதிவு தான் தற்போது நெட்டிசன்களின் பாராட்டுக்களோடு வைரலாகி வருகிறது.
பார்த்திபன் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், "‘கல்யாணசுந்தரம்’ போட்டோ செஷனோடு கைவிட்ட படம்...ஆனால் பூஜையன்று 10 ஜோடிகளுக்கு என் சொந்த செலவில் தாலி முதல் மெட்டி வரை சீர் செய்து, சினிமாப் பூஜைகளைப் பயனுள்ளதாகவும் செய்யலாம் எனத் தொடங்கி வைத்தேன். அதுவே பின்னர் பலரால் தொடரப்பட்டது.
ஒருமுறை தளபதி விஜய், என் தலைமையில் 16 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார். இதன் மூலம் புண்ணியம் சேர்த்துக் கொள்ளும் விஜய் தான் மணமக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என அப்போது புரட்டிப் பேசினேன். அப்படிப்பட்ட நல்ல காரியங்கள் எல்லாம் சேர்ந்து தான் அவருக்கு கட்சி தொடங்கும் தைரியத்தைக் கொடுத்தது." என்றார்.
Listen News!