• Jul 22 2025

சினிமாவுக்கு டாடா காட்டிய பிரபல நடிகை? இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

luxshi / 6 hours ago

Advertisement

Listen News!

பிரபல தென்னிந்திய நடிகை ராஷ்மிகா மந்தனா, "Dear Diary" என்ற பெயரில் புதிய பெர்ஃப்யூம் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.


கன்னடத்தில் "கிரிக் பார்ட்டி" திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா, "கீதா கோவிந்தம்" திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்றார். 

அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். 


தற்போது ஹிந்தியில் "தாமா" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சினிமாவுடன் இணைந்து தற்போது தனது சொந்த தொழில் முயற்சியாக "Dear Diary" பெர்ஃப்யூம் பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளார். 


இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

இது வெறும் பிராண்ட் இல்ல.. வெறும் வாசனை திரவியம் இல்ல.. இது என்னுடைய ஒரு பகுதி, வாசனை எப்போதும் என் தனிப்பட்ட வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாக இருந்து வருகிறது. இன்று நான் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.. இதைச் செய்ய முடிந்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.. நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன், ஆனால் மிகவும் பதட்டமாகவும் இருக்கிறேன்.. ஆனால் இதைத் தொடர உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களும் எனக்கு இருக்கும் என்று நம்புகிறேன்.

என்னைப் போலவே நீங்களும் இதை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த பெர்ஃப்யூம்களை ஆன்லைன் மூலம் வாங்குவதற்காக தனி இணையதளத்தையும் தொடங்கி, அதன் இணைப்பை தனது இன்ஸ்டா பையோவில் இணைத்துள்ளார்.



Advertisement

Advertisement