• Aug 05 2025

அமிர்தா வார்த்தையால் குஷியில் பாக்கியா குடும்பம்.! செல்வி வாழ்க்கைக்கு கிடைத்த விடிவுகாலம்

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, இனியா கோபியை பார்த்து டாடி sorry என்னை மன்னிச்சிடுங்க என்று சொல்லுறார். அதைக் கேட்ட கோபி இந்த பிரச்சனைக்கு எல்லாம் காரணம் நான் தான் என்கிறார். இதனைத் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு பாக்கியா சுதாகரிட்ட இருந்த தன்ர ஹோட்டலை புதுசா திறக்கிறார். 


பின் இனியா பாக்கியாவை பார்த்து உன்ன பார்க்க எனக்கு ஆச்சரியமா இருக்கு என்கிறார். மேலும் நிதீஷ் பிரச்சனை ஆரம்பிச்சதில இருந்தே நானும் நிறைய விஷயத்த கத்துக்கிட்டேன் என்று சொல்லுறார். இதனை அடுத்து ஈஸ்வரி அமிர்தாவை பார்த்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்திட்டு வா என்கிறார். அதைக் கேட்ட பாக்கியா எப்ப வீட்ட வந்தனீங்க என்று அமிர்தாவை பார்த்துக் கேட்கிறார். 

பின் எழில் தன்ர படம் அடுத்த மாதம் ரிலீஸாகும் என்று சொல்லுறார். அதைக் கேட்டஇனியா முதலாவது interview எனக்குத் தான் தரணும் என்கிறார். இதனை அடுத்து அமிர்தா கர்ப்பமா இருக்கிறாள் அவளுக்கு கண்டிப்பாக ஆம்பிள பிள்ள தான் பிறக்கும் என்று சொல்லுறார் ஈஸ்வரி.  பின் ஜெனி சமைக்கிறதை பார்த்த ஈஸ்வரி இண்டைக்கு ஹோட்டல் சாப்பாட்டைத் தான் சாப்பிடுறதோ தெரியல என்கிறார்.


அதைக் கேட்டு வீட்டில இருக்கிற எல்லாரும் சிரிக்கிறார்கள். இதனை அடுத்து ஜெனி சமைச்ச சாப்பாட்டை சாப்பிட்டு பார்த்திட்டு எல்லாரும் நல்லா இருக்கு என்கிறார்கள். பின் செல்வி பாக்கியாவிற்கு போன் எடுத்து ஆகாஷ் கலெக்டர்  ஆகிட்டான் என்று சொல்லுறார். அதனைத் தொடர்ந்து ஈஸ்வரி ஆகாஷுக்கும் இனியாவுக்கும் கல்யாணம் பண்ணி வைப்போம் என்கிறார். அதுக்கு பாக்கியா வேணாம் என்று சொல்லுறார்.  மறுநாள் ஆகாஷ் பாக்கியா வீட்ட வந்து ஸ்வீட் கொடுக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement