தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, ‘ஜெர்சி’ கௌதம் தின்னனுரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படத்தில் அதிரடி ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளது.
பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக அறிமுகமாகும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. தயாரிப்பாளர் நாக வம்சி இதை உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் வெளியாகியுள்ள டீசரும், அண்மையில் வெளியான டிரெய்லரும் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. டிரெய்லரில் விஜய் தேவரகொண்டாவின் மாஸ் தோற்றம், ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை மிகுந்த அதிர்வில் ஆழ்த்தியுள்ளது.
‘கிங்டம்’ திரைப்படம் ஒரு முழுக்க முழுக்க ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. படம் வருகிற ஜூலை 31-ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. தணிக்கை குழு இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் நேரம் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன. ‘கிங்டம்’ திரைப்படம் இந்த வருஷத்தின் மிக எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக திகழ்கிறது.
Listen News!