நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதிலும் பிரபலமான நட்சத்திரமாக உள்ளார். இந்திய திரைத்துறையின் இக்கால சூப்பர் ஸ்டாராகவும் இருக்கிறார். அவரது ஒவ்வொரு படமும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக உருவாகிறது. 2024 அக்டோபர் 10 அன்று தமிழ் நாட்டில் வெளியான "வேட்டையன்" திரைப்படமும் அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை.
எமோஷனல் மற்றும் திரில்லராக உருவாக்கப்பட்ட இந்த படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இயக்குநர் டி.ஜே. ஞானவேல், மற்றும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், திரைப்படத்தை பெரும் பொருட்செலவில் உருவாக்கியிருந்தது. வெளியான முதல் நாள் ஷோவில் இருந்து தீவிர ரசிகர்கள் தியேட்டர்களில் இப்படத்தை கொண்டாட்டமாக மாற்றியுள்ளனர்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, "வேட்டையன்" திரைப்படம் 2025, ஜப்பானில் "புல்லட்ஸ் அண்ட் ஐஸ்டிஸ்" என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. உலகளவில் தமிழ் திரைப்படங்களுக்கு உள்ள வரவேற்பு நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில், ரஜினியின் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. குறிப்பாக ஜப்பானில், அவரது படங்களுக்கு முன்பிருந்து தனித்துவமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
அந்த வரிசையில் "புல்லட்ஸ் அண்ட் ஐஸ்டீஸ்" என்ற பெயரில் வேட்டையன் வெளியாகி, தற்போது ஜப்பானில் ஒரு வாரத்திற்குள் 4 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
Listen News!