தமிழ் சினிமாவில் தனித்துவமான நடனம் மற்றும் நகைச்சுவை என்பவற்றால் ரசிகர்களை கவர்ந்தவர் தான் சாண்டி மாஸ்டர். நடிகராகவும், டான்ஸ் மாஸ்டராகவும் திகழும் அவர், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில், தனது திரைப்பயணம் குறித்து சிறப்பாக பகிர்ந்திருந்தார்.
அந்த நேர்காணலில், சாண்டி மிகவும் உணர்வுபூர்வமாகவும், நேர்மையாகவும் தனது அனுபவங்களை கூறியதிலிருந்து, அவரது தற்போதைய வளர்ச்சி எப்படி நடந்தது என்பதைக் காணமுடிகிறது. குறிப்பாக, "லோகா" திரைப்படத்தில் நடித்ததற்கான வாய்ப்பு எப்படி வந்தது என்பதையும், அதற்குப் பின்புலமாக "லியோ" திரைப்படம் எப்படி ஒரு முக்கிய திருப்பமாக இருந்தது என்பதை விளக்கினார்.
நேர்காணலில் சாண்டி “லியோ படத்தில் நடித்ததால் தான் லோகா பயணம் ஆரம்பித்தது. லியோவில் என் கதாபாத்திரம் இல்லை என்றால், இன்று நான் லோகாவில் நடித்திருக்க முடியாது. லோகா படத்தின் இயக்குநர் டொமினிக், லியோ படத்தைப் பார்த்த பிறகுதான் என்னை லோகாவிற்கு தேர்வு செய்தார். இது என்னுடைய வாழ்க்கையின் முக்கியமான திருப்புமுனை.” என்று கூறியிருந்தார்.
அவரது இந்த வரிகள், திரைத்துறையில் ஒரு வாய்ப்பு எப்படி இன்னொரு வாய்ப்புக்கு வழிவகுக்கிறது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
2023-இல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய்யின் லியோ படத்தில், சாண்டி சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அதில் அவர் காட்டிய அசத்தலான பங்களிப்பு இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
இதனாலேயே இயக்குநர் டொமினிக், "லியோ" படத்தில் சாண்டியின் பங்களிப்பைப் பார்த்த பிறகு, லோகா திரைப்படத்திற்கான முக்கியமான துணை கதாபாத்திரத்திற்காக அவரைத் தேர்ந்தெடுத்ததாக சாண்டி பகிர்ந்துள்ளார்.
Listen News!