ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் கூலி. இந்த படத்தில் அமீர்கான், சத்யராஜ், சவுபின், உபேந்திரா, நாகார்ஜுனா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கடந்த மாதம் 14ஆம் தேதி கூலி திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் இடம்பெற்ற மோனிகா என்ற பாடல் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளதோடு, ரீல்ஸ்களும் வைரலாகின. மோனிகா வீடியோ மட்டும் சுமார் 14 கோடி பார்வையாளர்களை கடந்தது.
கூலி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் இந்த படத்தில் ரஜினிகாந்த், அமீர்கான், உபேந்திரா, நாகார்ஜுனா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்ததால் அவர்களின் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில், கூலி படத்தில் இடம்பெற்ற மோனிகா பாடலின் வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ...
Listen News!