• Sep 12 2025

குமாரை நினைத்து வேதனைப்படும் கோமதி; பிடிவாதமாக நிற்கும் பாண்டியன்! கோபத்தில் கத்தும் கதிர்

subiththira / 6 hours ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, குமார் தன்ர மாரி கிட்ட சாப்பாடு தொண்டையில இறங்குதில்ல என்று சொல்லுறார். அதைக் கேட்ட மாரி அவன் குழந்தையா இருக்கும் போது எப்புடி சாப்பிடுவான் என்று சொல்லி அழுகிறார். இதனை அடுத்து ராஜி ரோட்டில நடந்து வரும் போது வடிவு ராஜி கிட்ட நீ வீட்டை விட்டு போனதோட மொத்த சந்தோஷமும் இல்லாமல் போச்சு என்கிறார். 


அதுக்கப்புறம் ஒருநாள் கூட நாங்க சந்தோஷமாவும் இல்ல சிரிக்கவும் இல்ல என்கிறார். அதைக் கேட்ட ராஜி வடிவப் பார்த்து நீ கவலைப்படாத எல்லாம் சரியாகிடும் என்று சொல்லுறார். அதனைத் தொடர்ந்து, வடிவு ராஜியைப் பார்த்து கம்பிளைன்ட்ட வாப்பர்ஸ் வாங்கச் சொல்லுறார். அதைக் கேட்ட ராஜி ஷாக் ஆகுறார். 

பின் குமாரோட பாட்டி கோமதி கிட்ட குமாரைப் பற்றிச் சொல்லி அழுகிறார். அதனை அடுத்து மீனா ராஜியைப் பார்த்து உன்ர முகம் ஒரு மாதிரி இருக்கு ஏன் என்ன ஆச்சு என்று கேட்கிறார். அதுக்கு ராஜி நடந்த எல்லாத்தையும் மீனா கிட்ட சொல்லுறார். அதைக் கேட்ட மீனா நீ மாமா கிட்ட குமாரோட கம்பிளைன்ட்ட பற்றிக் கதை என்கிறார்.


அதனைத் தொடர்ந்து கோமதி தன்ர அம்மா குமார் பற்றிக் கதைச்சு அழுகுது என்று பாண்டியன் கிட்ட சொல்லுறார். அதைக் கேட்ட கதிர் கோபப்படுறார். மேலும் பாண்டியனும் குமாரை மன்னிக்கவே மாட்டேன் என்று சொல்லுறார். அதனை அடுத்து குமார் சக்திவேலோட கோர்ட்டுக்குப் போறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement