• Sep 12 2025

என்னமா இப்படி பண்ணுறீங்க.. பிரியங்கா சோப்ரா வெளியிட்ட க்யூட் போட்டோஸ்

Aathira / 4 hours ago

Advertisement

Listen News!

2000 ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்று திரையுலகில் நுழைந்தவர் தான் பிரியங்கா சோப்ரா.  இவர் முதன் முதலில்  தமிழில் வெளியான தமிழன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.  அதன் பின்பு   தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை என்ற பாலிவுட் திரைப்படத்தின் மூலம் இந்தித் துறையில் நுழைந்தார்.

இதைத்தொடர்ந்து  ராம் சரண் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இவர் நடித்த படங்களில் இறுதியாக பாஜிராவ் மஸ்தானி என்ற படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன்பின் ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் அமெரிக்க பாடகரும் நடிகருமான  நிக் ஜோனாஸ் மணந்து அங்கேயே குடியேறினார். பின்பு வாடகை தாய் மூலம் பெண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்தார். 


பிரியங்கா சோப்ரா  9 வருடங்களுக்கு மேலாக ஒரு ஹிட் படமும் கொடுக்கவில்லை என கூறப்படுகின்றது. ஆனாலும்  தீபிகா படுகோன், ஆலியா பட் போன்ற பிரபல நடிகர்களுக்கு மேலாக  சுமார் 41 கோடியை சம்பளமாக பெறுகின்றாராம்.  இவருடைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 650 கோடி என கூறப்படுகின்றது. 

இந்த நிலையில், பாலிவுட் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரியங்கா சோப்ரா  தனது  கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

Advertisement

Advertisement