• Sep 12 2025

பராசக்தி & ஜனநாயகன் ஒரே தேதியில்?படக்குழுக்களின் புதிய அப்டேட் இதோ...!

Roshika / 2 hours ago

Advertisement

Listen News!

2026 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, கோலிவுட்டில் இரண்டு மாபெரும் படங்கள் நேரடி மோதலுக்கு தயாராகி வருகின்றன. விஜய் நடிக்கும் கடைசி படம் ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி – இரண்டும் ஒரே பண்டிகை காலத்தில் வெளியாக இருப்பது தற்போது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.


பராசக்தி படத்திற்கான படப்பிடிப்பு தாமதமாகி, சில நேரங்களில் ரிலீஸ் ஒத்திவைக்கப்படும் என கூறப்பட்டாலும், தற்போது டான் பிக்ச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட புதிய வீடியோ அறிவிப்பில், படம் ஜனவரி 14, 2026 – பொங்கல் தினத்தன்று வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரையில் கூறப்பட்ட ஜனவரி 9 அல்லது 12 என்ற தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.


இதே நேரத்தில், விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொங்கல் பண்டிகையை மையமாகக் கொண்டு ஐந்து நாட்கள் இடைவெளியில் இரண்டு பெரிய படங்கள் மோத உள்ளன.

சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம், 1960களின் இந்தி எதிர்ப்பு போராட்டங்களை மையமாகக் கொண்டு உருவாகும் பீரியட் படம். இதன் கதையும், கதாநாயகனின் தோற்ற மாற்றமும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. சூரரை போற்று புகழ் சுதா கொங்காரா இயக்கும் இப்படம், சிவகார்த்திகேயனை வெறும் காமெடி ஹீரோ அல்லாமல், ஒரு 'சீரியஸ்' கதாபாத்திரத்தில் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனநாயகன் படம், தளபதியின் கடைசி திரைப்படமாக இருப்பதால், அதற்கான எதிர்பார்ப்பு வானளவுக்கு உள்ளது. விஜய் இந்த படத்தின் மூலம் 1000 கோடி வசூல் சாதனையை ஏற்படுத்துவார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். ஆனால் பராசக்தியும் அதே நேரத்தில் வெளியாகும் நிலையில், ஜனநாயகன் வசூலுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


இருப்பினும், இரு படங்களுக்கும் இடையே ஐந்து நாட்கள் இடைவெளி இருப்பதால், இரண்டும் மிகப்பெரிய ஓப்பனிங் பெறும் என திரையரங்குகள் மற்றும் வணிகவட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. “எந்த படம் ரசிகர்களின் மனதை வெல்லும், அது தான் பாக்ஸ்ஆபிஸில் வெற்றி பெறும்” என திரை விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், சூர்யா - R.J. பாலாஜி கூட்டணியில் உருவாகும் கருப்பு திரைப்படமும் பொங்கல் ரிலீஸாகும் என முன்னதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது, ஜனநாயகன் மற்றும் பராசக்தி போன்ற இரண்டு பெரிய படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகுவதால், கருப்பு படம் வெளியீட்டை தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, கருப்பு திரைப்படம் எந்த தேதியில் வெளியாகும் என்பது குறித்து சூர்யா ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement