நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கும் இப்படம், விஜய்க்கு கடைசி திரைப்படமாக இருக்கலாம் என கூறப்படுவதால், ரசிகர்கள் மிகுந்த கவனத்துடன் இப்படத்தை எதிர்நோக்கி வருகின்றனர். இதைத் தொடர்ந்து விஜய், முழுமையாக அரசியல் ஈடுபாடில் கலந்துகொள்ளவுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படம், 2026-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகவுள்ளது என தயாரிப்புக் குழுவால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இயக்குநர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ், மற்றும் நெல்சன் ஆகியோர் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் பத்திரிகையாளர்கள் வேடத்தில் நடித்துள்ளதற்கான தகவலும் வெளியாகியுள்ளது. விஜய்க்கு நெருக்கமான இத்திரை இயக்குநர்கள் இப்படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு பரிசாக அமைந்துள்ளது.
Listen News!