சிவகார்த்திகேயன் – ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் புதிய திரைப்படமான மதராஸி, ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அமரன் படத்திற்கு பிறகு வெளியாகும் இப்படம், சிவகார்த்திகேயனின் ரசிகர்களிடையே பெரும் ஆவலையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளராக அனிருத் இணைந்துள்ள இப்படம், அவரும் சிவகார்த்திகேயனும் இணையும் எட்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வெளியான ’சலம்பல’ என்ற லவ் பேயிலியர் பாடல், சாய் அபயங்கரின் குரலில் இளைஞர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்போது, இரண்டாவது சிங்கிள் ‘வழியுறேன்..’ என்ற ரொமான்டிக் பாடலுக்கான புரொமோ வெளியாகியுள்ளது. அனிருத் குரலில் வெளியான புரொமோ, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. விக்னேஷ் சிவன் எழுதியுள்ள இந்த பாடல், ரெமோ படத்தில் வெளியான ’சிரிக்காதே’ பாடலை நினைவூட்டுவதாகவும், அனிருத் தன் பழைய பாடலையே புதிய மோதலுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
படத்தின் டிரைலரும் ஆடியோ லாஞ்சும் வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த நிகழ்வில் சிவகார்த்திகேயன் என்ன பேசப் போகிறார் என்பதற்காக அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
Listen News!