நிவின் பாலி நடித்த நியாண்டுகலுடേ நாட்டில் ஒரிடவெலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆல்தாஃப் சலீம், தற்போது தனது இரண்டாவது இயக்குநர் முயற்சியான ஓடும் குதிரா சாடும் குதிரா படத்தை முடித்துள்ளார். இப்படத்தில் பிரபல நடிகர் ஃபஹத் ஃபாசில் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, இப்படம் ஆகஸ்ட் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இதே நாளில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவான மற்றொரு படம் லோகாவும் வெளியாக இருக்கிறது. இரண்டு படங்களின் புரொமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் கல்யாணி, தன்னுடைய எதிர்கால திட்டங்களை பகிர்ந்துள்ளார். "நான் தற்போது கார்த்தி சார் நடிக்கும் மார்ஷல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த படத்திற்கு நான் 4 மாதங்கள் ஒதுக்கியுள்ளேன். ஒரே நேரத்தில் பல படங்களில் கமிட் ஆகும் விருப்பம் எனக்கு இல்லை. ஒரு படத்தை முழுமையாக முடித்த பின்பே அடுத்த படத்தில் கமிட் ஆக விரும்புகிறேன். அப்போதுதான் கதாப்பாத்திரத்துக்கு முழு மனதையும் செலுத்த முடியும்," என கல்யாணி தெரிவித்தார்.
கல்யாணியின் இந்த அணுகுமுறை, அவரது திறமை மற்றும் உறுதியான நடிப்பு கொள்கையை வெளிக்காட்டுகிறது. வருகிற ஓணம் பண்டிகையில் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தரவிருக்கின்றனர் ஃபஹத் மற்றும் கல்யாணி!
Listen News!