• Jul 23 2025

கல்யாணம் நிஜமா.? இல்ல போட்டோ ஷூட்டா.? நடிகர் கிருஷ்ணாவின் பதிவால் குழம்பிய ரசிகர்கள்..!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது அழகான நடிப்பு மற்றும் கம்பீரமான கெட்டப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் கிருஷ்ணா.  'கற்றது களவு', 'கழுகு' எனத் தனித்துவம் மிக்க கதாப்பாத்திரங்களில் திகழ்ந்திருக்கும் இந்த நடிகர், தற்போது தனது வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தை எளிமையான முறையில் கடந்துள்ளார். அதுதான் திருமணம். 


இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2008-ம் ஆண்டு, நீளன் இயக்கத்தில் வெளியான ‘அலிபாபா’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் கிருஷ்ணா. அதனைத் தொடர்ந்து பல தனித்துவமான படங்களில் நடித்து பிரபல்யமானார். 

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவியுடன் எடுத்த திருமணப் புகைப்படத்தை பகிர்ந்து, "A new beginning" என்று பதிவு செய்துள்ளார். இந்தப் பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகள் மற்றும் வாழ்த்து கமெண்ட்ஸுகளால் இணையத்தைக் கவர்ந்துள்ளது.


தனது மனைவியைப் பற்றிய விபரம் குறித்து கிருஷ்ணா இதுவரை எந்தவிதமான வெளியீடும் வெளியிடவில்லை. இவரது மனைவி திரையுலகைச் சேர்ந்தவரா? என்ற கேள்வி ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement