பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, மயில் சுகன்யாவைப் பார்த்து ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க என்று கேட்கிறார். அதுக்கு சுகன்யா தலை வலிக்குது என்று சொல்லுறார். அதைக் கேட்ட கோமதி தலை வலிச்சால் ரெஸ்ட் எடுக்கலாம் தானே என்கிறார். இதனை அடுத்து சுகன்யா மயிலைப் பார்த்து நீயும் கொஞ்ச நாள் வேலைக்கு போய்ட்டு இருந்த எல்லோ என்ன வேலை என்று கேட்கிறார்.
அதுக்கு மயில் ஹோட்டலில என்று சொல்லுறார். அதைக் கேட்ட உடனே கோமதி ஷாக் ஆகுறார். பிறகு மயில் டீச்சர் வேலைக்கு போனேன் என்று சொல்லி சமாளிக்கிறார். இதனை அடுத்து சுகன்யா மயிலைப் பார்த்து நீயும் மீனாவ மாதிரி வேலைக்குப் போயிருந்தால் வீட்டையும் சும்மா இருந்திருக்கலாம் office போயும் சும்மா இருந்திருக்கலாம் என்று சொல்லுறார். அதைக் கேட்ட மீனா கோபப்படுறார்.
அதைத் தொடர்ந்து பாண்டியன் காலில அடிபட்டு வீட்ட வாறார். அதைப் பார்த்த மயில் மாமா என்ன ஆச்சு என்று பெரிய சத்தமா கத்துறார். பின் எல்லாரும் ஓடி வந்து என்ன ஆச்சு என்று கேட்கிறார்கள். இதனை அடுத்து சரவணன் அப்பா கீழே விழுந்திட்டார் என்று சொல்லுறார். அந்த நேரம் பார்த்து மீனாவோட அப்பாவும் அம்மாவும் அங்க வந்து நிக்கிறார்கள்.
பின் மீனாவோட அம்மா மாப்பிளைக்கு வேலை கிடைச்சதுக்கு பொங்கல் வைக்கணும் என்று சொல்லுறார். இதனை அடுத்து பழனி ஒரு மாதிரி மாப்பிள்ளைக்கு அரசாங்க வேலையை வாங்கி கொடுத்திட்டீங்க என்று சொல்லுறார். அதைக் கேட்ட மீனாவோட அப்பா இந்த வேலைக்கு காசு கொடுத்தது சம்மந்தி தான் என்கிறார். அதைக் கேட்ட சுகன்யா இந்த பணத்தை கொடுத்தது மீனா என்று சொல்லுறார். அதைக் கேட்ட மீனாவோட அப்பா அங்கிருந்து கோபத்தோட கிளம்புறார். பின் குமாரவேல் ராஜியை பார்த்து அரசி எப்புடி இருக்கிறாள் என்று கேட்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!