• Aug 25 2025

OTT -ல் விலைபோகாத வனிதா படம்..! யூட்யூபில் அடித்து நொறுக்கிய பிரம்மாண்ட சாதனை

Aathira / 4 hours ago

Advertisement

Listen News!

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் குக் வித் கோமாளி, பிக்பாஸ் உள்ளிட்ட  பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இவர் ஆரம்ப காலங்களில் நடிகையாக நடித்தார். விஜயுடன் இணைந்து சந்திரலேகா படத்தில் நடித்தார்.  ஆனாலும் இவருக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக சினிமாவில் நிலைத்து நிற்க முடியாமல் போனது.  

இப்போது இயக்குநராக களம் இறங்கியுள்ளார் வனிதா விஜயகுமார்.  வனிதாவின் மகள் ஜோவிகா தயாரிப்பில் வனிதா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மிஸ்டர் அண்ட் மிஸஸ். இந்த படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் இணைந்து நடித்திருந்தார். 

மேலும் இந்த படத்தில்  ஷகீலா, ஸ்ரீமன், பவர்ஸ்டார் சீனிவாசன், பாத்திமா, செஃப் தாமு என பலர் நடித்திருந்தார்கள்.  இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்  படுமோசமான விமர்சனத்தை பெற்றது. 


இந்த நிலையில், வனிதா நடிப்பில் வெளியான மிஸ்டர் அண்ட் மிஸஸ் திரைப்படத்தை ஓடிடியில் யாரும் வாங்க முன் வராத நிலையிலும்,  தனது யூட்யூப் சேனல் மூலம் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று வனிதா சாதனை படைத்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.  

அதாவது  நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி நடித்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் திரைப்படம் திரையரங்குகளில் பெரிதாக வெற்றி பெறவில்லை. இதனால் எந்த ஒரு ஓடிடி நிறுவனமும் வாங்க முன் வரவில்லை.

இதை தொடர்ந்து அவர் தனது சொந்த  யூட்யூப் சேனலில் படத்தை வெளியிட்டார். கட்டண சந்தா மூலம் வெளியிடப்பட்ட இந்தத் திரைப்படம் தற்போது இலவசமாக வெளியிடப்பட்ட இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 1.6 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. 

Advertisement

Advertisement