பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இன்றைய promo-வில் பாண்டியன் காலில அடிபட்டு வாறார். அதைப் பார்த்த கோமதி பதறி அடிச்சுப் போய் என்ன ஆச்சு என்று கேட்கிறார். அதுக்கு பழனி படிக்கட்டில தண்ணியிருக்கிறது தெரியாமல் வழுக்கி விழுந்திட்டார் என்று சொல்லுறார்.
அந்த நேரம் பார்த்து மீனாவோட அப்பாவும் அம்மாவும் அங்க வந்து நிக்கிறார்கள். அதைப் பார்த்த மீனா என்ன சொல்லாமல் கொள்ளாமல் திடீரென வந்திட்டீங்க என்கிறார். அதுக்கு மீனாவோட அம்மா மாப்பிள்ளைக்கு வேலை கிடைச்சதுக்கு குலதெய்வம் கோயிலுக்குப் போய் பொங்கல் வைக்க வேணும் என்று சொல்லுறார்.
அதுக்கு பாண்டியன் எல்லாரும் சேர்ந்து போய்ட்டு வந்திடுவம் என்று சொல்லுறார். இதனை அடுத்து பழனி மீனாவோட அப்பாவப் பார்த்து எப்புடியோ மாப்பிள்ளைக்கு அரசாங்க வேலை வாங்கி கொடுத்திட்டீங்க என்று சொல்லுறார். அதுக்கு மீனாவோட அப்பா பணம் கொடுத்து உதவினது சம்மந்தி தானே என்கிறார்.
அதனை அடுத்து சுகன்யா செந்திலுக்கு அரசாங்க வேலைக்கு காசு கொடுத்தது மாமா இல்ல மீனா தான் என்று சொல்லுறார். அதைக் கேட்ட உடனே எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். இதைக் கேட்ட மீனாவோட அப்பா, அம்மா கோபத்தோட அங்கிருந்து கிளம்புறார்கள்.
Listen News!