தமிழ் சினிமாவில் பன்முகம் கொண்ட ஒரு சக்தியாக திகழ்ந்தவர் டி. ராஜேந்தர். அவர் இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும், இயக்குநராகவும் மற்றும் நடிகராகவும் மக்கள் மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவர்.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில், அவர் தனது பழைய நண்பர், திரை உலகின் மறைந்த “கேப்டன்” விஜயகாந்த் குறித்து சில உணர்வுபூர்வமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அதன்போது, “திரை உலகத்தில் மறைந்த கேப்டன் என்னுடைய பெரிய நண்பர். அவருக்கு நான் நிறைய படங்களுக்கு மியூசிக் பண்ணியிருக்கிறேன். இந்த அரசியலால் அதுவும் சில பத்திரிகைகள் பண்ண கூத்தால எங்களுடைய நட்பு பிரிந்தது.
ஆனா, எங்க நட்பை ஒட்ட வைத்தது என்னுடைய பையன் சிலம்பரசன். கேப்டனும் எங்க அப்பாவும் இப்புடி இருக்க கூடாது என்று எங்க ரெண்டு பேருக்கும் ஒரு பாலமாக இருந்து இணைத்து வைத்தது என் பையன்." என்று பகிர்ந்திருந்தார். இந்த நேர்காணல் மூலம் விஜயகாந்த் மற்றும் சிம்புவிற்கு இடையே உள்ள பாசம் தெளிவாகத் தெரிகின்றது.
Listen News!