கன்னட திரைத்துறையின் முக்கிய துணை நடிகர்களில் ஒருவராகக் கருதப்பட்ட நடிகர் தினேஷ் மங்களூரு, இன்று (25 ஆகஸ்ட், 2025) உடல்நலக்குறைவால் காலமானார் என்பது திரையுலகையே உலுக்கிய செய்தியாகி இருக்கிறது.
கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலமானதாக உறவினர்கள் உறுதி செய்துள்ளனர். தினேஷ் மங்களூருவின் மறைவு, கன்னட சினிமா மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினேஷ் மங்களூரு, கடந்த நாட்களாக கன்னட சினிமாவில் பல முக்கியமான துணை மற்றும் வேடிக்கைக் கதாபாத்திரங்களில் நடித்தவர். குறிப்பாக, கேஜிஎப், ரிக்கி, ராணா விக்ரமா போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார். அத்தகைய நடிகரின் மறைவு திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Listen News!