தமிழ் சினிமாவில் குடும்ப பாணி கொண்ட படங்களை இயக்குவதில் தனிச்சிறப்புடன் திகழ்பவர் இயக்குநர் பாண்டிராஜ். மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இவர் மீண்டும் இயக்கியிருக்கும் படம் தான் ‘தலைவன் தலைவி’. இன்று திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். வித்தியாசமான காதல், உறவுகளுக்குள் வரும் குழப்பங்கள் மற்றும் கலகலப்பான நகைச்சுவை என கலவையான அம்சங்களோடு படம் ரசிகர்களை திருப்திப்படுத்துகிறது.
இப்படத்தில், விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் யோகி பாபு மற்றும் தீபா சங்கர் உள்ளிட்டோர் துணை வேடங்களிலும் நடித்துள்ளனர்.
இப்படத்தைப் பார்த்த ரசிகர் ஒருவர், " ‘தலைவன் தலைவி’ ஒரு தம்பதிகளின் உறவுப் பயணத்தை மையமாகக் கொண்ட குடும்பப் படம். முதல் பாதியில் கதையின் ஹீரோ (விஜய் சேதுபதி) மற்றும் ஹீரோயின் (நித்யா மேனன்) வாழ்க்கையில் நடக்கும் சந்தோஷங்களும், சின்ன சின்ன சண்டைகளும், கல்யாண வாழ்க்கையின் சிக்கல்கள் என்பன மையமாக உள்ளன." எனக் கூறியுள்ளார்.
இரண்டாம் பாதியில், இந்த இருவரின் உறவுக்குள் ஊடுருவும் வெளியாரின் கருத்துகள், குடும்பக் குழப்பங்கள் சோகம் தரும் திருப்பங்கள் என பாண்டிராஜ் பாணியில் வரும் அனைத்து சிக்னேச்சர் அம்சங்களும் கதையில் ஜெயிக்கின்றன எனவும் சிலர் தெரிவிக்கின்றனர். இவ்வாறாக இப்படம் வெளியான சில மணி நேரங்களுக்குள் பாசிடிவ்வான கருத்துகளையே பெற்றுள்ளது.
Listen News!