• Jul 22 2025

"நிறைய பேர் வழக்கு தொடரச் சொன்னார்கள்.."TOURIST FAMILY படம் குறித்து தியாகராஜன் கருத்து...

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

அறிமுக இயக்குநர் அபிஷாந்த் இயக்கத்தில் மே முதலாம் தேதி சசிகுமார் ,சிம்ரன் நடிப்பில் வெளியாகிய டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படம் 75 கோடி வரை வசூலித்து வெற்றி பெற்றது.


இந்த படத்தில் மம்பட்டியான் படத்தில் வந்த ஏ மாமோய் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது படத்தின் இயக்குநர் தியாகராஜா இது குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். குறித்த பதிவில் அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் ஒரு சில விடயங்களை பகிர்ந்துள்ளார்.


குறித்த பதிவில் "என் பட பாடலை TOURIST FAMILY படத்தில் பயன்படுத்திய இயக்குநருக்கு வாழ்த்துகள் இதற்காக என்னிடம் யாரும் அனுமதி பெறவில்லை நிறைய பேர் வழக்கு தொடரச் சொன்னார்கள் என் பட பாடல், ஒரு படத்தின் வெற்றிக்கு உதவியதற்கு நான் சந்தோஷம்தான் படுகிறேனே தவிர வழக்குத் தொடர்ந்து பணம் பார்க்கும் எண்ணம் எனக்கு வரவில்லை நியாயமாகப் பார்த்தால் நான்தான் அவர்களுக்கு காசு கொடுக்கணும் " என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement