• Jun 07 2025

Mr. Zoo Keeper ரிலீஸாகும் முன்னே..புகழுக்கு அடித்த ஜாக்பாட்! பூஜையுடன் ஆரம்பமான Next Movie

subiththira / 11 hours ago

Advertisement

Listen News!

‘Mr. Zoo Keeper’ திரைப்படத்துக்குப் பிறகு, புகழ் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம் இன்று விமர்சையாக பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படத்தை Lakshmi Movie Makers தயாரிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் டீவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் தான் புகழ்.


அதனுடைய காமெடி மற்றும் நேர்த்தியான நடிப்பால், ஆரம்பத்தில் சிறிய supporting characters இல் இருந்தவர், இப்போது முழுமையான ஹீரோவாக தன்னை மாற்றியமைத்துள்ளார். இவர் நடித்து வரும் ‘Mr. Zoo Keeper’ படமே இதற்கு ஓர் உதாரணம். இந்நிலையில், அந்தப் படம் வெளியாவதற்குள் அவரின் அடுத்த படமும் தொடங்கிவிட்டது என்பது அவரது வளர்ச்சியை நிரூபிக்கிறது. 


இந்தப் புதிய படம் மிக முக்கியமான தயாரிப்பு நிறுவனமான Lakshmi Movie Makers மூலம் உருவாகின்றது. இது அவர்களுக்கும் புகழுக்கும் முதல் கூட்டணியாகும். தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி following உருவாக்கியுள்ள புகழுக்கு, ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனத்தின் படம் கிடைத்திருப்பது மிக முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகின்றது.


தற்போது இதன் தலைப்பு, இசையமைப்பாளர் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இப்படத்தின் first look poster மற்றும் title reveal விரைவில் நடைபெற உள்ளதாக தயாரிப்பு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement