• Jun 07 2025

கமல் மீது தனிப்பட்ட கோபமா..? சோலியை முடித்த மணிரத்னம்..படம் வெற்றியா? தோல்வியா?

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, கமல், திரிஷா, அசோக் செல்வன் நடிப்பில் இன்று வெளியாகிய "thugh life " திரைப்படம் குறித்து தவறான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளதுடன் படத்தில் மிகவும் பெரிய ஆட்கள் பணியாற்றி உள்ளதால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது ஆனால் தற்போது அது உடைக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த படம் குறித்து "கதை இல்லை ", "ஏழாம் அறிவு 2 போல் இருக்கு " போன்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது. படத்தினை சிம்புவின் ஸ்டைல் மற்றும் கமலின் குரலுக்காக பார்க்கலாம் என பலர் கூறி வருகின்றனர். இதைவிட நடிகை திரிஷா அவர்களும் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் நடித்துள்ளார்.


இதைவிட படத்தில் 9 பாடல்கள் இருப்பதாகவும் சின்மயி பாடிய முத்தமழை பாடல் 10 ஆவது பாடலாக இணைப்பதாக கூறி ஏமாற்றி இருப்பதாக ரசிகர்கள் பொங்கி எழுந்துள்ளனர். மேலும் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு கேங்க்ஸ்டர் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை மனைவி சுகாசினி மறுத்தும் மணிரத்னம் எடுத்துள்ளார் என பலர் கழுவி ஊத்தி வருகின்றனர். இதைவிட படம் முழுக்க கமலை புரட்டி புரட்டி அடிப்பது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement