பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, இனியா டீவியில நிதீஷ் குடும்பத்தை பற்றி சொல்லுறதை பார்த்த ஈஸ்வரி இவ எதுக்குடா இப்புடி செய்திட்டு இருக்கா என்று கோபியை பார்த்துக் கேட்கிறார். மேலும் உடனே இனியாவ போய் கூட்டிக் கொண்டு வரச்சொல்லுறார். இதனை தொடர்ந்து இனியா வீட்ட வந்ததை பார்த்த கோபி டிவோர்ஸ் கிடைக்கிற வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம் என்கிறார். இனியா அதுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்புறார்.
இதனை தொடர்ந்து இனியா, டாடி சொன்ன மாதிரி அமைதியாக இருக்கணும் என்று தான் நினைச்சன் ஆனா என்னால முடியல என்கிறார். மேலும் அந்த குடும்பம் பண்ண துரோகம் தான் எனக்கு நினைவில இருக்கு என்று சொல்லுறார். பின் ஜெனி செழியனுக்கு போன் பண்ணி சுதாகர் டீவியில் இனியாவை பற்றிக் கதைக்கிறார் என்று சொல்லுறார். அதைக் கேட்ட செழியன் உடனே டீவியை on பண்ணி பார்க்கிறார்.
பின் சுதாகர் கதைக்கிறத கேட்ட குடும்பம் ஷாக் ஆகுறார்கள். அதைத் தொடர்ந்து இனியா பாக்கியாவ பார்த்து சுதாகர் ரொம்ப கேவலமா பேசியிருக்காரா என்று கேட்கிறார். அதுக்கு பாக்கியா கேவலமானவங்க அப்புடித் தான் பேசுவாங்க என்று சொல்லுறார். மறுநாள் காலையில இனியா சுதாகர் குடும்பத்தை பற்றி IG கிட்ட கம்பிளைன்ட் பண்ணியிருக்கேன் என்று வீட்டில இருக்கிற ஆட்களுக்குச் சொல்லுறார். அந்த விஷயம் சுதாகருக்கும் தெரிய வந்து அவர் குடும்பத்தோட வெளியூருக்கு போறார்.
பின் பொலீஸ் சுதாகர் வீட்ட போய் ஆட்கள் யாரும் இருக்கினமோ என்று தேடுறார். அதனை அடுத்து பொலீஸ் இனியாவுக்கு போன் எடுத்து அங்க யாரும் இல்ல என்று சொல்லுறார். அதைக் கேட்ட இனியா கோபப்படுறார். பின் சுதாகர் கோபியை ரோட்டில பார்த்து உங்க பொண்ணு கொடுத்த கம்பிளைன்ட்ட வாப்பர்ஸ் பண்ண சொல்லி மிரட்டுறார். அதைக் கேட்ட கோபி இப்ப பொலீஸுக்கு கால் பண்ணுறேன் என்கிறார். அப்புடியே ரெண்டு பேரும் அடிபடுறார்கள். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!