• Aug 06 2025

மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கமில்லை!மக்களிடம் மன்னிப்பு கேட்ட கிங்டம் படக்குழு!

Roshika / 2 hours ago

Advertisement

Listen News!

புதிதாக வெளியான கிங்டம் திரைப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக சமூக ஊடகங்களில் கருத்துகள் வெளிவந்துள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு, கிங்டம் படக்குழு ஒரு அதிகாரபூர்வமான அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளது.  மக்கள் உணர்வுகளை இந்த திரைப்படம் பாதித்திருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளனர். படக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:


"கிங்டம் படத்தின் சில காட்சிகள் தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக கேள்விப்பட்டோம். எங்களின் நோக்கம் மக்களின் உணர்வுகளை பாதிப்பதல்ல. கலைக்காக உருவாக்கப்பட்ட இந்த படத்தில் எதுவும் துணிச்சலான அல்லது களங்கம் தரும் நோக்கில் செய்யப்படவில்லை.


தமிழ் மக்களின் பெருமை மற்றும் பாரம்பரியத்தை மதிக்கும் மனப்பான்மையுடன் தான் இந்தப் படத்தை தயாரித்துள்ளோம். எனினும், எங்கள் படத்தில் ஏதேனும் காட்சிகள் மக்கள் மனதில் வேதனையை ஏற்படுத்தியிருந்தால் அதற்கு நாம் வருந்துகிறோம்." என பதிவிட்டு உள்ளனர். மேலும் இதனைப்பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement