ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய திரைப்படமான ‘மதராஸி’, வெளியீட்டுக்கு இன்னும் 30 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படக்குழுவால் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனும், ருக்மிணி வசந்தும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த புதிய போஸ்டரில், சிவகார்த்திகேயனின் கேரக்டரின் மாறுபட்ட ஸ்டைலும், சென்னை பின்னணியில் இடம்பெறும் கதையின் சாரமும் வெளிப்படையாக காட்டப்பட்டுள்ளது. மாஸ் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் இந்த போஸ்டர் மூலம் , இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இது ஏ.ஆர்.முருகதாஸ் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் முதல் படம் என்பதால், ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகத்தினரும் உற்சாகத்துடன் எதிர்நோக்கி வருகின்றனர். மேலும், கன்னட திரைப்படங்கள் மூலம் பிரபலமான ருக்மிணி வசந்தின் தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!