‘ஸ்டார்’ திரைப்படத்தில் கவினுடன் நடித்துப் பிரபலமான நடிகை ப்ரீத்தி முகுந்தன், அதன் பிறகு இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் ‘ஆச கூட’ என்ற வீடியோ பாடலில் நடித்து வைரலானார். பான் இந்தியன் படமான கண்ணப்பாவில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்ததுடன், தற்போது மலையாள சினிமாவிலும் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
அவர் நடித்துள்ள புதிய மலையாள படம் மைனே பியார் கியா, அறிமுக இயக்குநர் ஃபைசல் இயக்கியுள்ளார். ஹ்ரிது ஹருன் நாயகனாக நடித்துள்ள இப்படம் காதலும், திகிலும் கலந்து அமையும் ஒரு சினிமாவாக உருவாகியுள்ளது. ஹ்ரிது ஹருன் முந்தைய முரா மற்றும் All We Imagine As Light போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள டீசரில், ப்ரீத்தி முகுந்தனை திருமணம் செய்ய காரில் அழைத்துச் செல்லும் காட்சி, அதனைத் தொடர்ந்து ஏற்படும் சஸ்பென்ஸ், சண்டைகள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் படத்தில் அஸ்கர் அலி, மிதுன், ஜெகதிஷ், முஸ்தஃபா, ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, ஜியோ பேபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் வெளியாகும் இந்த திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 29 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Listen News!