• Aug 05 2025

4 கோடியில் எடுத்த படம்,100 கோடியை தாண்டியது வசூல்!சாம் CS சொன்னது துல்லியமாக நடந்தது!

Roshika / 1 hour ago

Advertisement

Listen News!

சமீபத்தில் பிரபல இசையமைப்பாளர் சாம் CS அளித்திருந்த நேர்காணலில், “மஹாவதார் நரசிம்மா” திரைப்படம் குறித்து அவர் கூறிய வார்த்தைகள் இன்று பலிக்கின்றன. "இந்த படத்தை யாரும் மதிக்கல, பெருசா பேசல. ஆனால் படம் வெளியாகிய பிறகு அது அதற்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும்" என அவர் கூறியிருந்தார்.


அந்த வார்த்தைகள் உண்மையாக்கப்பட்டிருக்கின்றன. வெறும் 4 கோடி பட்ஜெட்டில் உருவான “மஹாவதார் நரசிம்மா”, தற்போது ரூ.100 கோடியை தாண்டி வசூல் செய்து சினிமா உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. படம் வெளியாகிய சில நாட்களிலேயே பெரும் வரவேற்பு, பாராட்டு மற்றும் ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. சினிமா உலகமே வியந்து பார்த்திருக்கும் இந்த வெற்றி, படத்தின் தரம் மற்றும் கதையின் வலிமையைக் காட்டுகிறது.


இந்த ஒரு அவதாரத்திலேயே இப்படியான வரவேற்பு கிடைத்திருக்க, இன்னும் 9 அவதாரங்களுக்கான படங்கள் வந்தால் என்னவெல்லாம் சாதிக்கலாம் என்று எதிர்பார்க்கின்றனர். இந்த வெற்றியைப்போல, "நல்ல கதைக்கும், தரமான படத்திற்கும் மார்க்கெட்டிங் தேவையே இல்லை" என திரையுலக பிரபலங்களும் கருத்து தெரிவிக்கின்றனர். 

Advertisement

Advertisement