• Aug 05 2025

First Anniversary-ஐ ஜாலியாக கொண்டாடிய வரலட்சுமி.! எங்கெல்லாம் போயிருக்காங்கன்னு தெரியுமா?

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரைத்துறையில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்றுள்ளவர் தான் நடிகை வரலட்சுமி. சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோரின் மகளாக இருந்தாலும், தனது திறமையால் தனக்கென ஒரு புதிய பாதையை உருவாக்கி அதிகளவான மக்களின் மனத்தைக் கவர்ந்திருந்தார். 


தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிப்படங்களில் வில்லி கதாபாத்திரங்களாகவும், பெண்மையின் சக்தியை பிரதிபலிக்கும் ஹீரோயினாகவும் தனது நடிப்புத்திறமையை நிரூபித்தார் வரலட்சுமி.

கடந்த ஆண்டு, வரலட்சுமி தனது நீண்ட நாள் காதலர் நிக்கோல் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவரது திருமணம் சின்னத் திரை மற்றும் திரைப்பட உலகத்திலேயே ஒரு சந்தோஷமான நிகழ்வாகவும், சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டதுமான ஒன்றாகவும் இருந்தது.


இவர்கள் தற்பொழுது தங்களது முதலாவது ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இதன் போது, வரலட்சுமி தனது கணவர் சப்பிறைஸாக செய்தவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement