பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், ஹிந்தி திரையுலகில் தனது அறிமுகத்தை மிக பிரமாண்டமாகச் செய்துள்ளார். ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கும் ‘வார் 2’ திரைப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ளார். அவருடன் கியாரா அத்வானியும் கவர்ச்சிகரமான கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது, இது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இரு ராணுவ வீரர்கள் ஒருவர் நாட்டிற்கு உண்மையுடன் செயல்படுபவர், மற்றவர் தன் கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்படுபவர் என்ற மோதல்களை மையமாக கொண்டு, திரில்லிங் ஆக்ஷன் காட்சிகளோடு படம் உருவாகியுள்ளது.
‘பிரம்மாஸ்திரா’ புகழ் அயன் முகர்ஜி இயக்கும் இப்படம், யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
Listen News!