சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, அண்ணாமலை கிரிஷுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதைப் பார்த்த ஈஸ்வரி இப்ப இருக்கிற பிரச்சனைக்கு இதுதான் முக்கியம் என்கிறார். பின் முத்து வீட்ட வந்து அம்மாட எல்லாப் பிரச்சனையும் முடிஞ்சிருச்சு என்று சொல்லுறார். அதைக் கேட்ட பார்வதி இனிமேல் அந்த பொண்ணோட குடும்பம் வந்து மிரட்டாதா என்று கேட்கிறார்.
பின் அண்ணாமலை விஜயாவை பார்த்து முத்து ஒரு காரியத்தில இறங்கினா அதில ஜெயிச்சு தான் காட்டுவான் என்று சொல்லுறார். இதனை தொடர்ந்து பார்வதி, மனோஜும் உங்க கூட வந்தவரோ என்று முத்துவைப் பார்த்துக் கேட்கிறார். அதுக்கு முத்து ஆமா ஆன்ட்டி மனோஜ் தான் எல்லா வேலையும் செய்து கடைசில அவனை கட்டிப்போட்டும் வைச்சிருந்தாங்க என்று சொல்லுறார்.
அதைக் கேட்ட மனோஜ் இப்ப இதெல்லாம் கேட்டாங்களா என்று கேட்கிறார். பின் மீனா ரதிக்கும் அந்த பையனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க முடிவெடுத்திருக்காங்க என்று சொல்லுறார். இதனை தொடர்ந்து முத்து விஜயாவை பார்த்து இனிமேல் இந்த டான்ஸ் class எல்லாம் நடத்த வேண்டாம் என்கிறார். அதைக் கேட்ட விஜயா எல்லாரும் வேலைக்கு போக நான் மட்டும் வீட்ட இருக்கிறதோ என்று கேட்கிறார்.
இதனை தொடர்ந்து மனோஜ் ரோகிணிக்காக pizza வாங்கிக் கொடுக்கிறார். அதை ரோகிணி கிரிஷுக்கு கொடுக்கிறார். அதை மீனா பார்த்துக் கொண்டிருக்கிறார். பின் மீனா கிரிஷுக்கு போட்ட சாப்பாட்டை முத்துவுக்கு கொண்டு போய் கொடுக்கிறார். பின் ரோகிணி கிரிஷ் மேல பாசமா இருக்கிறதை பார்க்க எனக்கு சந்தேகமா இருக்கு என்கிறார். பின் பார்வதி வீட்ட ரதி வீட்டு ஆட்கள் வந்து நாங்க பட்ட மனஉளைச்சலுக்கு எங்களுக்கு 10 லட்சம் தாங்க என்று கேட்கிறார்கள். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!