விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, கமல் ஹாசனின் இந்தியன் 2 மற்றும் தக் லைப் படங்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. தமிழகம் மட்டுமல்லாது, தென் இந்தியா முழுவதும் பிரமாண்ட புரொமோஷன் வேலைகளை கமல் மேற்கொண்டார். ஆனால், இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.
மணிரத்னம் இயக்கிய தக் லைப் படம் விமர்சனங்களும் மீம்ஸ்களும் பெற்று, ரசிகர்கள் மத்தியில் கலவையான கருத்துகளை உருவாக்கியது. இதனால், கமலின் அடுத்த பட வேலைகள் மெதுவாக நகர்ந்தன.
இந்த சூழலில், அன்பு-அறிவு இயக்கும் அடுத்த படத்தில் கமல் ஹாசன் நடிக்கவுள்ளார். இது கமலின் 237வது திரைப்படம் ஆகும். இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை, பிரபல மலையாள எழுத்தாளர் ஷியாம் புஷ்கரன் எழுத உள்ளார். இவர் மஹேஷின்டே பிரதிகாரம், கும்பலாங்கி நைட்ஸ், ஜோஜி போன்ற முக்கிய படங்களை இயற்றி, தேசிய விருதும் பெற்றவர்.
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் குறித்து அதிகாரபூர்வ புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கமல், இயக்குனர்கள் அன்பு-அறிவு, எழுத்தாளர் ஷியாம் புஷ்கரன் ஆகியோர் உள்ளனர். இப்படம் கமலின் திரும்பும் வெற்றிப் பயணத்திற்கு கதவாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Listen News!