2022ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் வெடிகொண்டது காந்தாரா என்ற படம். ரிஷப் செட்டி இயக்கி நடித்த இந்த படமானது வெறும் 20 கோடியில் உருவாகி, உலகளவில் 450 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பஞ்சருளி என்ற கடவுளின் கதையை மையமாக கொண்டு, ஆரவாரமான காட்சிகளால் திரையரங்குகளை கம்பிக்க வைத்த இப்படம், இரண்டாம் பாகம் வரும் வகையில் முடிந்தது.
இப்போது, காந்தாரா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் அக்டோபர் 2-ம் தேதி, தசரா பண்டிகையையொட்டி படம் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த ஒரு வருட காலத்தில் படப்பிடிப்பின்போது ஏராளமான சவால்களை சந்தித்துள்ளது குழுவினர். குறிப்பாக, மலையிலுள்ள இடங்களில் நடைபெற்ற சூட்டிங்கில் பல அமானுஷ்ய சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் ஐந்து பேர் மரணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஒரு சூட்டிங் வேன் 20 அடி பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆறு பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் கொண்ட இப்படத்தில், ஒரு சண்டையின்போது ஆற்றில் படகு கவிழ்ந்து, கேமரா மற்றும் பிற உபகரணங்கள் முழுவதும் நீரில் மூழ்கியதென தகவல்கள் கூறுகின்றன. அமானுஷ்யங்களை மீறி உருவாகியுள்ள காந்தாரா 2, ரசிகர்களுக்குக் goosebumps தரும் வகையில் உருவாகியிருக்கிறது என்ற எதிர்பார்ப்பு வலுப்பெறுகிறது.
Listen News!