தென்னிந்திய சினிமாவில் தற்போது பேசுப் பொருளாக காணப்படும் ஒரு விடயம் தான் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம். இந்த திரைப்படத்தின் முதலாவது பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இதன் இரண்டாவது பாகமும் அதைவிட சக்கைப் போடு போட்டு வருகிறது.
புஷ்பா 2 படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு காணப்பட்டது. இதனால் பிரீ புக்கிங் இந்தியா முழுவதும் சிறப்பாகவே அமைந்தது. அது மட்டும் இல்லாமல் ரிலீஸ்க்கு முன்பதாகவே ஆயிரம் கோடிக்கு மேல் இந்த படம் வசூலித்து உள்ளது. இதுவே இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக காணப்படுகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு புஷ்பா படத்தின் முதலாவது பாகம் வெளியானது. இந்த படம் தெலுங்கில் மட்டும் இல்லாமல் முழு உலகிலும் வசூல் வேட்டை நடத்தி ஹிட் படமாக மாறியது. இதில் நடித்த அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாஸில் ஆகியவர்களின் நடிப்பு பாராட்டை பெற்றது. மேலும் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது.
அதிலும் இந்த படத்தில் நடிகை சமந்தா ஊ. சொல்றியா மாமா உ.. ஊ.. சொல்றியா மாமா.. என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். இந்த பாடலும் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகி சமந்தாவின் ரேஞ்சே வேற நிலைக்கு கொண்டு போனது. அதேபோல இந்த படத்தின் இரண்டாவது பாகத்தில் ஸ்ரீ வள்ளி ஒரு குத்தாட்ட பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஐந்தாம் தேதி வெளியான புஷ்பா 2 படத்தின் மொத்த கலெக்ஷன் வெளியாகியுள்ளது. அதன்படி முதல் நாளில் 294 கோடிகளை வசூலித்த புஷ்பா 2 இரண்டாவது நாளில் 449 கோடிகள் வரை வசூலித்து இருந்ததாக கூறப்பட்டது.
தற்போது வார இறுதி நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் மூன்றாவது நாளான நேற்றைய தினம் இந்தியாவில் 120 கோடிகளை வசூலித்து உள்ளதாம் புஷ்பா 2. அது மட்டும் இல்லாமல் உலக அளவில் 150 கோடிகளை வசூலித்து இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் முதல் மூன்று நாட்களில் மட்டும் 600 கோடி வரை வசூலித்து இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
Listen News!