• Dec 26 2024

2 வருட திருமண வாழ்க்கை, மூன்று முறை கருக்கலைப்பு- நடிகை ஸ்ரீவித்யா இத்தனை கொடுமைகளை அனுபவித்திருக்கின்றாரா?

stella / 11 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் 80களில் பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர் தன் நடிகை ஸ்ரீவித்யா. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது இயக்குநர் பாலச்சந்திரன் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படம் தான்.

 இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஸ்ரீவித்யா. இருவரும் ஜோடியாக நடித்த முதல் படம் இதுவாகும்.இப்படத்தில் நடிக்கும்போதே கமல்ஹாசனுக்கும், ஸ்ரீவித்யாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவும் எடுத்தனர்.


இருப்பினும், இருவருடைய சினிமா கெரியரும் முடிவுக்கு வந்து விடும் என்று ஸ்ரீவித்யாவின் அம்மா சொன்ன காரணத்தினால் இருவரும் பிரிந்து விட்டனர்.ஸ்ரீவித்யா உடனான காதல் முறிவுக்கு பின்னர் வாணி கணபதியை காதலித்து கரம்பிடித்தார் கமல்.ஸ்ரீவித்யா உதவி இயக்குநராக பணியாற்றிய ஜார்ஜ் தாமஸ் என்பரைக் காதலித்து கரம் பிடித்தார்.

ஜார்ஜ் தாமஸிற்காக திருமணத்துக்கு முன்பே கிறிஸ்தவ மதத்துக்கு மாறி இருந்தார் ஸ்ரீவித்யா.திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் நடிக்க வேண்டாம் என்கிற முடிவில் இருந்துள்ளார் ஸ்ரீவித்யா, ஆனால் ஜார்ஜ் தாமஸ் அவரை கட்டாயப்படுத்தி மீண்டும் சினிமாவில் நடிக்க வைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் தன்னுடைய சொத்துக்களை ஜார்ஜ் அபகரித்ததால் அவர் பணத்துக்காக தான் தன்னை திருமணம் செய்திருக்கிறார் என்பதை உணர்ந்த ஸ்ரீவித்யா அவரை 1980-ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டாராம். 


இந்த 2 வருட திருமண வாழ்க்கையில் பல கொடுமைகளை அனுபவித்த ஸ்ரீவித்யா 3 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.இதையடுத்து சென்னையில் இருந்து திருவனந்தபுரத்தில் குடியேறிய ஸ்ரீவித்யாவுக்கு கேன்சர் பாதிப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அதற்காக சிகிச்சை எடுத்தும் பலனளிக்காததால் 2006-ம் ஆண்டு மரணமடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement