• Dec 26 2024

பிரதீப் ஆண்டனி அவ்வளவு கெட்டவரெல்லாம் இல்ல, அவரையும் போட்டிருக்கலாம்- வருத்தப்பட்டு பேசிய நிக்சன், கடும் கோபத்தில் ரசிகர்கள்

stella / 11 months ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே எப்பிஷோட் நாளைய தினம் ஒளிபரப்பப்படவுள்ளது. இதற்கான படப்பிடிப்பு இன்று நடைபெற்று வருகின்றது. மற்ற சீசன்களை விட இந்த சீசனில் பல்வேறு சர்ச்சைக்குரிய சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. அதையெல்லாம் தாண்டி தற்போது மாயா, விஷ்ணு, தினேஷ், மணிச்சந்திரா, அர்ச்சனா ஆகிய 5 பேர் இறுதி வரை சென்றிருந்தனர்.

இவர்களில் யார் டைட்டில் வின்னர் ஆகப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. மேலும் விஜே அர்ச்சனா மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார்இதன்மூலம் அர்ச்சனா பிக் பாஸ் சீசன் 7 வின்னர் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.


இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இந்த சீசன் போட்டியாளர்கள் அனைவரும் அடங்கிய போட்டோ ஒன்று வைத்திருந்தனர். அதில், மாயா முதலிடத்திலும், அவருடன் மணி மற்றும் விஜய் இடம்பெற்றிருந்தனர். அதற்கு கீழ் தினேஷ், மணி மற்றும் அர்ச்சனா என்றும் அதனை தொடர்ந்து மற்ற போட்டியாளர்கள் என அனைவரும் இடம்பெற்றிருந்தனர்.


ஆனால், பிரதீப் ஆண்டனி புகைப்படம் இடம்பெறவில்லை.அதை பார்த்த நிக்சன் இந்த போட்டோவில் பிரதீப் ஆண்டனி அண்ணாவும் இருந்திருக்கலாம் என விசித்ராவிடம் ரொம்பவே ஃபீல் பண்ணி பேசுகிறார். மேலும், அவர் ரொம்ப கெட்டவர், அவர் இந்த வீட்டை விட்டே போயாக வேண்டும் என்றெல்லாம் நான் பேசியதே இல்லை என்றும் நிக்சன் பேசிய பேச்சைக் கேட்டு பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement