• Dec 26 2024

பொங்கல் சர்ப்ரைஸ் இது தானா?- வெங்கட் பிரபு வெளியிட்ட GOAT படத்தின் வீடியோ- குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்

stella / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்யின் 68-வது திரைப்படம் GOAT. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் GOAT படத்தையும் தயாரிக்கிறது.

 இப்படத்தில் நடிகர் விஜய் உடன் மீனாட்சி செளத்ரி, பிரசாந்த், சினேகா, பிரபுதேவா, லைலா, மோகன், பிரேம்ஜி, வைபவ், அஜ்மல், ஜெயராம், நிதி சத்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.


இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதில் ஒன்று வயதான கேரக்டர் மற்றொன்று இளம் வயது கதாபாத்திரம். அதில் விஜய் இளம் வயது கதாபாத்திரத்தில் நடிக்கும் காட்சிகளை டீ ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தி தளபதியை இளமையாக காட்டும் முயற்சியில் படக்குழு இறங்கி உள்ளது.

இந்நிலையில் தற்பொழுது ஷுட்டிங் சென்னையில் நடைபெற்று வருகின்றது.இதனால், GOAT ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வருவதால் விஜய் அவர்களை சந்தித்து வருகின்றார்.இது குறித்த வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவதுண்டு.


இந்நிலையில், விஜய் ரசிகர்களை சந்தித்த வீடியோவை எடிட் செய்து தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார் வெங்கட் பிரபு. GOAT படத்தின் பிஜிஎம் உடன் எடிட் செய்யப்பட்ட இந்த வீடியோ விஜய் ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

முக்கியமாக மீசை இல்லாத ஹேர் ஸ்டைலுடன் இருக்கும் வித்தியாசமான கெட்டப் ரசிகர்களுக்கே  சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. அதேநேரம் பொங்கலுக்கு GOAT அப்டேட் வெளியாகும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இந்த வீடியோவே போதும் எனத் தெரிகிறது.



Advertisement

Advertisement