• Dec 26 2024

ஒவ்வொரு மாதமும் ஒரு மாஸ் நடிகரின் படம் ரிலீஸ்.. சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டு டிசம்பர் வரை ஒவ்வொரு மாதமும் ஒரு மாஸ் நடிகரின் திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த ஆண்டு சினிமா ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான் என்று கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களின் படங்கள் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் ஒவ்வொரு மாதமும் ஒரு படம் ரிலீஸ் தேதியை பிக்ஸ் செய்து வருவது ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக தற்போது ஏப்ரல் மாதம் நடைபெற்று வரும் நிலையில் மே மாதம் கவின் நடிக்கும் ’ஸ்டார்’ ஜூன் மாதம் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ மற்றும் தனுஷின் ’ராயன்’ ஜூலை மாதம் விக்ரம் நடித்த  ‘தங்கலான்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ’அமரன்’ ஆகஸ்ட் மாதம் விஜய்யின் ’கோட்’ மற்றும் அல்லு அர்ஜுனின் ’புஷ்பா 2’ செப்டம்பர் மாதம் சிவகார்த்திகேயன் நடித்த ’எஸ்கே 23’ திரைப்படம் அக்டோபர் மாதம் சூர்யாவின் ’கங்குவா’ திரைப்படம் மற்றும் ரஜினிகாந்தின் ’வேட்டையன்’ திரைப்படம் நவம்பர் மாதம் அஜித்தின் ‘விடாமுயற்சி’ மற்றும் டிசம்பர் மாதம் தனுஷின் ‘குபேரா’ ஆகிய படங்கள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது

இந்த ஆண்டு ஏற்கனவே ’அரண்மனை 4’ உள்ளிட்ட சில படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் நிலையில் அந்த படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement