• Dec 26 2024

''22 ஆண்டுகள் ஓடிவிட்டது..மீதி வருஷத்தை உன் கைப்பிடிச்சிட்டே கடக்கனும்...'' திருமண நாளில் ரோபோ சங்கர் ட்விட்!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். அதன்பின்னர் தமிழ் திரையுலகில் தீபாவளி, வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வேலைக்காரன், ஹீரோ, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோபோ ஷங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். அப்போது அவர் உடல் மெலிந்து அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி இருந்தார். எனினும் அதிலிருந்து மீண்டு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளார்.


இந்நிலையில், இன்றைய தினம் தனது 22வது திருமண நாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார் ரோபோ ஷங்கர். அவருக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, தனது திருமண நாளில் ரஜினி மற்றும் கமல் இருவரையும் தனது மனைவியுடன் நேரில் சென்று சந்தித்து ஆசியும்  வாங்கியுள்ளார் ரோபோ ஷங்கர்.



Advertisement

Advertisement