• Dec 26 2024

25 வருட கனவு.. அதி சொகுசு காரை வாங்கிய VJ அர்ச்சனா! விலையை கேட்டா ஆடிப் போய்டுவீங்க... எமோஷனல் வீடியோ

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் சன் டி.வி, ஜீ தமிழ், விஜய் டிவி என முன்னணி தமிழ் சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபல்யமானவர் தான் அர்ச்சனா, இது தவிர விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோவான பிக்பாஸ் சீசன் 4 இலும் கலந்து கொண்டு ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார்.

தொடர்ந்து சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற டாக்டர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.  இதில் அர்ச்சனாவின் மகள் சாராவும் அவருக்கு மகளாகவே டாக்டர் படத்தில் நடித்திருந்தார்.  

அர்ச்சனாவின் தங்கையான அனிதா சந்தோக் உம் இவருர்களுடன் சேர்ந்து நிறைய வீடியோக்களை வெளியிடுவார்.அத்தோடு இவர் பிரபல யூடியூப்பரும் ஆவார்.


இந்த நிலையில், தற்போது ஜீ தமிழ் புகழ் விஜே அர்ச்சனா தனது மகள் மற்றும் குடும்பத்தாருடன் இணைந்து சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டா  பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


அதன்படி Mercedes-Benz GLC ரக காரை சுமார் ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார் அர்ச்சனா. இதற்காக அவர் கிட்டத்தட்ட 25 வருடம் உழைத்ததாகவும் குறித்த பதிவில் ரொம்பவும் எமோஷனலாக பதிவிட்டு உள்ளார்.

தற்போது இந்த வீடியோ வைரலாகி வருவதோடு அர்ச்சனாவுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றார்கள்.



Advertisement

Advertisement