• Dec 25 2024

2025 காதலர் தினத்திற்கு வெளியாகவுள்ள 3 புதிய காதல் படங்கள்!போட்டி போடும் பிரபல நடிகர்கள்..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

2025-ம் ஆண்டின் காதலர் தினத்தை (பிப்ரவரி 14) முன்னிட்டு திரையில் மூன்று புதிய காதல் படங்கள் வெளியாக உள்ளன. 

இதில் முதலாவது, தனுஷ் இயக்கி, நடித்து தயாரிக்கும் "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" படம். இந்த படத்தை தனுஷின் வொண்டர் பார் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கிறார், மேலும் தனது சகோதரியின் மகன் பவிஷ் இதன் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அனுகா சுரேந்தரன் நடிக்க, இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் பணிபுரிகிறார். இந்த படமும் பிப்ரவரி 14-ல் வெளியாகிறது.

இதில் அடுத்ததாக, நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் தனது "டிராகன்" படத்தை காதலர் தின வெளியீட்டுக்காகத் திட்டமிட்டுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரதீப்புடன் அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், கேஎஸ் ரவிக்குமார் போன்ற பிரபல இயக்குனர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை "ஓ மை கடவுளே" படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.

மூன்றாவது படமாக அர்ஜுன் தாஸ் நடிக்கும் "ஒன்ஸ்மோர்" காதலர் தினத்தில் வெளியாகிறது. அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார்.

Advertisement

Advertisement