• Dec 26 2024

4 மணி நேர காலக்கெடு முடிந்தது, மன்சூர் அலிகான் விவகாரம் - விரைவில் நல்ல முடிவு- நடிகர் சங்கம் விடுத்த அறிவிப்பு

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், லியோ படத்தில் த்ரிஷா நடிக்கிறார் என்று தெரிந்தவுடன் அவருடன் பெட்ரூம் காட்சி இருக்கும் என்று நினைத்தேன். அதேபோல் பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சியும் இருக்கும்; குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போல் த்ரிஷாவை போட முடியவில்லை.

 அவரை கண்ணிலேயே காட்டவில்லை. 150 படங்களில் நான் செய்யாத அட்டூழியமா” என என்று கூறியிருந்தார். இந்த வீடியோ வைரலாகி வந்த நிலையில் த்ரிஷா அவரது பேச்சினை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆணாதிக்க மனநிலை மற்றும் அவமரியாதை செய்யும் விதம், பெண் வெறுப்பை பரப்பும் வகையிலும் அவரது பேச்சு இருக்கிறது எனக் கண்டனம் தெரிவித்திருந்தார்.


மேலும் த்ரிஷாவுக்கு ஆதரவாக திரையுலகைச் சேர்ந்த பலரும் தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.இவரின் இந்த பேச்சுக்கு, இயக்குனர் கார்த்தி சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், குஷ்பூ, வானதி ஸ்ரீனிவாசன், சிரஞ்சீவி, உட்பட பல பிரபலங்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

 நடிகர் சங்கம், திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் மன்சூல் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இருப்பினும் நடிகர் சங்கம் தவறு செய்து விட்டது.என்னிடம் எதுவும் விசாரிக்காமல் மன்னிப்புக் கூற சொல்லி விட்டார்கள். தமிழ் நாடே தன் பக்கம் இருக்கின்றது நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையை 4 மணி நேரத்தில் உடனடியாக திரும்பப் பெற வேண்டும், என்னிடம் முறையான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும், எல்லோரையும் உசுப்பேற்றி விட்டு எனக்கு எதிராக பேச வைக்கிறார்கள் எனத் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் நடிகர் சங்கம் தற்பொழுது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மன்சூர் அலிகான் விடுத்த 4 மணி நேர காலக்கெடு முடிந்தது - விரைவில் நல்ல முடிவு வரும் என்று தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement