• May 30 2026

500 கோடியா.? வெற்றியை தாண்டி வரலாறு படைக்கும் ‘கருப்பு’.! மொத்த வசூல் விபரம் இதோ..

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த திரைப்படங்களில் ஒன்றாக நடிகர் சூர்யாவின் ‘கருப்பு’ படம்  வெளியானது. இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம், ஆக்‌ஷன், கிராமத்து ஆன்மீக அம்சங்கள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவற்றின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.

கடந்த 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். 

மேலும் அவர்களுடன் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் பின்னணி இசையும் பாடல்களும் படத்தின் வெற்றிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளன. 

பொதுவாக பெரிய நடிகர்களின் படங்களுக்கு விடுமுறை நாட்களில் மட்டுமே கூட்டம் காணப்படும். ஆனால் ‘கருப்பு’ திரைப்படம் அதற்கு விதிவிலக்காக மாறியுள்ளது. படம் வெளியான இரண்டு வாரங்களுக்குப் பிறகும் வேலை நாட்களிலும் திரையரங்குகளில் ரசிகர்கள் தொடர்ந்து வருகை தந்து வருகின்றனர். பல திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


இந்த வெற்றியின் மூலம் சூர்யாவின் திரைப்பயணத்தில் புதிய சாதனையும் உருவாகியுள்ளது. இதுவரை அவரது எந்த திரைப்படமும் திரையரங்கு வசூலில் மட்டும் 200 கோடி ரூபாயை தாண்டாத நிலையில், அந்த சாதனையை முறியடித்த முதல் திரைப்படமாக ‘கருப்பு’ உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில், படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ‘கருப்பு’ திரைப்படம் உலகளவில் 300 கோடி ரூபாயை கடந்த வசூலை பதிவு செய்துள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சர்வதேச சந்தையில் 7 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலை ‘கருப்பு’ திரைப்படம் பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போதைய வசூல் வேகத்தைப் பார்க்கும்போது, விரைவில் 400 கோடி மற்றும் 500 கோடி ரூபாய் வசூல் மைல்கல்லையும் ‘கருப்பு’ எட்டும் என்ற நம்பிக்கை திரையுலக வட்டாரங்களில் நிலவி வருகிறது. அது நடந்தால், சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படமாக ‘கருப்பு’ புதிய வரலாறு படைக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

Advertisement

Advertisement