• Dec 27 2024

ஸ்டார் ஒரு மொக்க படம்... டாடா பாத்துட்டு ஏமாந்துட்டன்! தனது வேலையை காட்டிய ப்ளூ சட்டை

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான கவின் நடிப்பில், பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இயக்குனர் இளன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ஸ்டார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகின்றது.

இளன் இயக்கத்தில் ஏற்கனவே பிரபல நடிகரான  ஹரிஷ் கல்யாண் நடிக்க ஒப்பந்தமாகி அந்தப் படத்தில் இருந்து விலகி இருந்தார். இதை தொடர்ந்து அதில் நடிக்க கவின் ஒப்பந்தமானார். தற்போது ஸ்டார் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

இந்த நிலையில், பிரபல திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் கவின் நடித்த ஸ்டார் படத்திற்கும் விமர்சனம் கொடுத்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,


நடிகனாக வேண்டுமென்று ஆசைப்பட்டு தோற்றுப் போன ஒருவரின் மகன், தானும் நடிகராக வேண்டுமென்று ஆசைப்பட்டு அதற்காக பாம்பே கல்லூரியில் சென்று படிக்கிறார். ஆனால் ஏன் பாம்பே சென்றார்? தமிழகத்தில் நல்ல பயிற்சி பள்ளிகளே இல்லையா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த படத்தின் முதல் பாதியில் ஒரு காதலியுடனும், இரண்டாம் பாதியில் இன்னொரு காதலியுடனும் கவின் பயணித்து வருகிறார். அவர்கள் ஏன் இந்த கதைக்குள் வந்தார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. அந்தக் காட்சிகளை நீக்குனாலும் படம் அப்படியேதான் இருக்கும். அறிமுக இயக்குனர் இளன் இந்த படத்தை முற்றிலும் சொதப்பி வைத்துள்ளார்.

டாடா படத்தை பார்த்துவிட்டு கவினுக்கு நல்ல கதை கேட்கும் திறன் இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் அதை ஏமாற்றும் வகையில் ஒன்றுக்கு மாகாத ஒரு கதையில் கவின் நடித்துள்ளார் என தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார் .

Advertisement

Advertisement