• Dec 25 2024

காதல் தேசம் படத்தில் தமிழ் இரசிகர்களை கவர்ந்த கதாநாயகிக்கு ஹாலிவுட்டில் வாய்ப்பு !

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

1996 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளிவந்த காதல் தேசம் திரைப்படம் மூலமாக தமிழ் இரசிகர்களுக்கு அறிமுகமானவர் தபஷ்ஷும் ஃபாதிமா ஹஷ்மி எனும் இயற்பெயரைக் கொண்ட தபு.மேலும் இத்திரைப்படத்தில் அப்பாஸ், வினீத் மற்றும் பலர் நடித்திருந்தனர்.


தொடர்ந்து இருவர்,தாயின் மணிக்கொடி,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்,ஸ்நேகிதியே ஆகிய தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகின் கவனத்தை ஈர்த்தார் .தமிழ் திரையுலகம் தாண்டி தெலுங்கு,மலையாளம்,மராத்தி,ஹிந்தி மற்றும் ஆங்கில திரைப்படங்களிலும் தனது திறமையை நிரூபித்தவர் தபு.


இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு டெனிசு வில்லெனுவ் இயக்கத்தில் வெளியான  ஒரு ஐக்கிய அமெரிக்க காவிய அறிவியல் புனைவுத் திரைப்படமானா Dune: Part One இன் அடுத்த பாகமான 'DUNE: PROPHECY’இன் நடிகர் தெரிவுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தபு இப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

Advertisement

Advertisement